இந்தியாவில் காதலனுக்கு செல்பி வீடியோ எடுத்து அனுப்பிவிட்டு இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள வி.வி நகரை சேர்ந்தவர் ரம்யா. அங்குள்ள தனியார் கல்லுாரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்த இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிவபார்கவ் என்ற இளைஞருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறியுள்ளது.
கடந்த சில மாதங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில், சிவபார்கவ் திடீரென ரம்யாவுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.
இதனால் ரம்யா சிபார்கவ்விடம் ஏன் பேச மறுக்கிறாய் என்று கெஞ்சியுள்ளார். அதுமட்டுமின்றி நண்பர்களை தூதுவிட்டும்
சிவபார்கவ் பேசாததால், கடும் விரக்தியடைந்த ரம்யா தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து, வீட்டில் இருக்கும் கொக்கியில், தனது துப்பாட்டாவை மாட்டிய ரம்யா அதை அப்படியே நேரலையில் வீடியோவாக பதிவிடத் துவங்கினார்.
பின்னர் காதலனுக்கு வாட்ஸ் ஆப்பில் அந்த வீடியோவை அனுப்பி விட்டு தன்னிடம் ஒரு நிமிடம் மட்டும் பேசினால் போதும் என பலமுறை செய்தி அனுப்பினார்.
ஆனால் காதலன் சிவபார்கவிடம் இருந்து எந்தப் பதிலும் வராததால், நேரலையில் வீடியோ பதிவாகிக் கொண்டிருந்த நிலையில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
அறைக்குள் சென்ற ரம்யா நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் பெற்றோர் கதவைத் தட்டிப் பார்த்தனர். அவர் திறக்கவில்லை. பின்னர் கதவை உடைத்துப் பார்த்தபோது துாக்கில் தொங்கிய நிலையில் ரம்யா சடலமாகக் கிடந்தார்.
சடலத்தை மீட்ட பொலிசார் சம்பவ இடத்தில் இருந்த அவரது செல்போனை ஆய்வு செய்தபோது அதில் வீடியோவும் காதலனுக்கு ரம்யா அனுப்பிய செய்திகளும் இருந்தன. அவற்றின் அடிப்படையில் பொலிசார் வழக்குப் பதிவு செய்து காதலன் சிவ பார்கவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.