சுவிட்சர்லாந்தில் ஒருநாளைக்கு மட்டும் 3.5 மில்லியன் மாஸ்குகள் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்கள் அனைவரும் மாஸ்குகள் அணிவது கட்டாயமாகும்.
பெரும்பாலான நாடுகளில் இந்த விதிமுறை அமுலில் உள்ள நிலையில், சுவிட்சர்லாந்தில் மட்டும் தினமும் 3.5 மில்லியன் மாஸ்குகள் பயன்படுத்தப்படுவதாக பெடரல் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.
மருத்துவ துறையில் மட்டும் 1.5 முதல் 2 மில்லியன் மாஸ்குகள் பயன்படுத்தப்படுகிறது.
இதுதவிர பொது போக்குவரத்தை பயன்படுத்தும் மக்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், கடைகளுக்கு செல்லும் மக்கள் மாஸ்குகளை பயன்படுத்துகின்றனர்.
இதில் 70 சதவிகித மாஸ்குகள் சீனாவில் இருந்தும், 30 சதவிகித மாஸ்குகள் ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் பெறப்படுகிறது.
மேலும் ஒரு மாதத்தில் மட்டும் 105 மில்லியன் மாஸ்குகள் பயன்படுத்தப்படுகிறதாம்.