புபோனிக் பிளேக் எனப்படும் கொடிய நோய்த் தொற்றால் 15 வயது சிறுவன் பலியான நிலையில், பல்வேறு நாடுகளுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகள் பல கொரோனாவின் கோர தாண்டவத்தில் இருந்தே இன்னும் மீளாத நிலையில்,
இன்னொரு உயிர் கொல்லி நோய் தீவிரமாக பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.
தற்போது அந்த நோயால் 15 வயது சிறுவன் பலியாகியுள்ளான். குறித்த சிறுவன் மங்கோலியாவில் இந்த நோய்க்கு இலக்காகியுள்ளான்.
அவனுடன் தொடர்பு கொண்ட டஜன் கணக்கான மக்கள் கொடிய நோயால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சிறுவன் பலியானதை அடுத்து ரஷ்யாவும் சீனாவும் இந்தக் கொடிய நோய் பரவலால் பாதிக்கப்படக்கூடியவை என்பதால் எச்சரிக்கப்பட்டுள்ளன.
பலியான அந்த சிறுவன் தமது இரண்டு நண்பர்களுடன் மலைப்பகுதியில் வாழும் பிராணியின் இறைச்சி சாப்பிட்ட பிறகு அதிக காய்ச்சல் ஏற்பட்டது.
கொறித்து உண்ணும் இந்த பிராணியின் இறைச்சியை சாப்பிட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு அவர் இறந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நோய்த்தொற்று பாதித்த பின்னர் 24 மணி நேரத்திற்குள் உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் மரணம் உறுதி என கூறப்படுகிறது.
தற்போது சிறுவனின் குடியிருப்பை சுற்றியுள்ள 5 மாவட்டங்களுக்கு ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.