அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் இந்தியாவை டிஜிட்டல் மயமாக்க 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
2020-ம் ஆண்டுக்கான கூகுள் இந்தியா நிகழ்ச்சியில் இன்று பேசிய அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, கூட்டு முதலீடு மற்றும் செயல்பாட்டு, உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் முதலீடுகள் ஆகியவற்றின் மூலம் இதைச் செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் இந்தியாவை டிஜிட்டல் மயமாக்க 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார். இந்தியாவை டிஜிட்டல் மயமாக்குவதில் முக்கிய நான்கு பகுதிகளில் இந்த முதலீடு இருக்கும் என்றும் அவர் கூறினார்.
முன்னதாக பிரதமர் மோடி உடன் சுந்தர் பிச்சை உரையாடினார். அப்போது, தகவல் மற்றும் இணைய பாதுகாப்பு குறித்து உரையாடியதாக பிரதமர் ட்வீட் செய்துள்ளார்.
This morning, had an extremely fruitful interaction with @sundarpichai. We spoke on a wide range of subjects, particularly leveraging the power of technology to transform the lives of India’s farmers, youngsters and entrepreneurs. pic.twitter.com/IS9W24zZxs
— Narendra Modi (@narendramodi) July 13, 2020