கிளிநொச்சியில் மூளைக்காச்சல் காரணமாக ஐந்து வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் கடந்த நேற்று மாலை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி பாரதிபுரத்தைச்சோ்ந்த விஜயராஜ் விஸ்னுஜன் என்ற குழந்தையே மூளைக்காச்சல் காரணமாக இறந்துள்ளது.
சில நாட்களாக காச்சலும் வாந்தியும் காணப்பட்டதாகவும் பின்னா் குறித்த குழந்தையை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுவந்த போது ஏற்கனவே குழந்தை இறந்து காணப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன் பின்னா் உடற்கூற்று பரிசோதனையை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியும், திடீர் மரணவிசாரணையை மரணவிசாரணை அதிகாரி திருலோகமூர்த்தியும் மேற்கொண்டதன் பின்னா் சடலம் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.