தமிழகத்தில் முன்னாள் காதலியிடம் கணவன் கொஞ்சி கொஞ்சி பேசியதால் அவரது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் எருமனூர் கிராமத்தை சேர்ந்த விஜயகுமாருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஷோபனாவுக்கும், 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில், வரதட்சணை கேட்டு ஷோபனாவை அவரது மாமியார் கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.
இந்நிலையில் ஊரடங்கால் சென்னையில் ஐடி கம்பெனியில் வேலை பார்த்த விஜயகுமார் பணியை இழந்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.
அங்கிருக்கும் போது, விஜயகுமாரின் போனுக்கு அழைப்பு வந்துள்ளது, அதை ஷோபனா எடுத்து பேசிய போது விஜயகுமாரின் காதலி என அறிமுகமான பெண் ஒருவர் ஷோபனாவிடம் அனைத்தையும் கூறியுள்ளார்.
இதனால் குழப்பத்தில் இருந்த ஷோபனா, கணவரிடம் அதுபற்றி விசாரித்துள்ளார், தன்னை பற்றிய விடயங்கள் அம்பலமானதால் அதை மறைக்க ஷோபனாவை அடித்து உதைத்துள்ளார்.
இதனால் மனமுடைந்த ஷோபனா தூக்கிட்டு தற்கொலை செய்ய முடிவெடுத்து செல்போனில் இரண்டு வீடியோக்களை பதிவு செய்தார்.
ஒன்றில் தன் கணவரின் பெண் தொடர்பு மற்றும், மாமியார் வரதட்சணை கேட்டு அடித்து உதைத்து கொடுமைப்படுத்துவது குறித்து தெரிவித்துள்ளார்.
மற்றொரு வீடியோவில், தன்னை கணவர் அடிக்கும் போது , வீட்டுக்குள் சென்று அறையை பூட்டி அடிக்கச்சொல்லி மாமியார் தூண்டியதாக வேதனை தெரிவித்த ஷோபனா, தனது ஒரு வயதுக் குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறும், தன்னுடைய அப்பா இறந்த இடத்தின் அருகே தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்றும் தனது தாயிடம் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இந்த இரு வீடியோக்களையும் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி வைத்து விட்டு புதன்கிழமை காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டர் ஷோபனா.
இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வரும் காவல்துறையினர் இரு வீடியோக்களையும், முன்னாள் காதலி பேசிய ஆடியோவையும் கொண்டு விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.