பிரித்தானியாவில் இரவு நேரங்களில் வீட்டில் இருக்கும் சிறுமிகள் மற்றும் பெண்களை பாலியல் வேட்டையாடும் நபர் 15 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள நிலையில், அந்த நபர் தொடர்பான சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் Radcliffe பகுதிகளில் இரவு நேரத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகள் இருக்கும் வீட்டிற்குள் புகுந்து பாலியல் வன்கொடுமை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடனே, டாக்சி டிரைவரான Jason Bursk என்ற 51 வயது நபர் நுழைந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் இவர், 13 வயது சிறுமி ஒருவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதையடுத்து இது தொடர்பான வழக்கு விசாரணை, Manchester Minshull Street Crown நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி, உங்களின் பொல்லாத, மோசமான மற்றும் கொள்ளையடிக்கும் நடத்தைக்கு எந்தவிதமான காரணமும் இருக்க முடியாது என்று கூறினார்.
இதையடுத்து, Jason Bursk கற்பழிப்பு முயற்சி, பாலியல் வன்கொடுமை, பாலியல் குற்றத்தைச் செய்வதற்கான நோக்கத்துடன் அத்துமீறியது மற்றும் இதேபோன்ற நோக்கத்துடன் அத்துமீறல் முயற்சி உள்ளிட்ட அனைத்து குற்றங்களுக்குமான குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
இந்த நடவடிக்கைள் உங்களை ஒரு மோசமான பாலியல் வேட்டையாடும் நபராக காட்டுவதாக நீதிபதி கூறியுள்ளார்.
நவம்பர் 2018 மற்றும் கடந்த ஆண்டு நவம்பர் மாதங்களுக்கு இடையில், Jason Bursk தூங்கிக் கொண்டிருந்தபோது 70 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணைத் தாக்கி, படுக்கையறையில் இருந்த 13 வயது சிறுமியைத் வன்கொடுமை செய்ய முயன்றார்.
அப்போது அந்த சிறுமியின் சகோதரி, அவரை தள்ளிவிட முயன்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து Jason Bursk வீடு ஒன்றின் உள்ளே நுழைந்து வெளியே வரும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் கால்சட்டை கழன்ற நிலையில் இருக்கிறார். அது சிறுமி ஒருவரை வன்கொடுமை செய்ய முயன்ற வீட்டின் உள்ளே இருந்த வந்தது என்று பிரபல ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.