மனித வாழ்வில் வயதாகிச் செல்லும்போது உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழும்.
குறிப்பாக அனேகமான பாகங்களின் செயற்பாடுகள் குறைந்து செல்லும்.
அதேபோன்று பற்களிலும் உறுதி குறைவதுடன் பல்வேறு குறைபாடுகளும் தோன்ற ஆரம்பிக்கும்.
எனினும் சில நடைமுறைகளைக் கையாள்வதன் மூலம் இப் பிரச்சினைகளிலிருந்து சற்று தப்ப முடியும்.
குறிப்பாக பற்களை சுற்றியுள்ள வழுவழுப்பான கவசம் (Enamel) அகன்று செல்ல ஆரம்பிக்கும். இதனால் பற்களில் கூச்சத் தன்மை அதிகமாக காணப்படும்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் மென்பையான பற்தூரிகையை பயன்படுத்தி பல்துலக்க ஆரம்பிப்பது சாலச் சிறந்ததாகும்.
அதேபோன்று உமிழ்நீரின் அளவும் வெகுவாக குறைய ஆரம்பித்துவிடும்.
இதனால் வாய் மற்றும் பற்கள் உள்ள பகுதியில் வறட்சி காணப்படும்.
எனவே அதிகமாக நீர் அருந்துதல் மற்றும் இனிப்பு தன்மையற்ற சுவிங்கம் சாப்பிடுதல் என்பன சற்று பயன்தரக்கூடியதாக இருக்கும்.
இவற்றுடன் பருவகால மாற்றங்களுக்கு ஏற்படும் வெவ்வேறு நோய்கள் பற்களில் உண்டாகக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இதனைத் தவிர்ப்பதற்கு வாய் பகுதியை சுகாதாரத் தன்மையுடன் பேணுவதோறு, அவ்வப்போது தாடைகளில் மசாஜ் செய்துவரவேண்டும்.
தவிர வாய் பகுதி வறண்டு காணப்படுதல், ஈறுகளில் உண்டாகும் நோய் மற்றும் நோய்த்தொற்று ஆகியவை துர்நாற்றத்திற்கு முக்கிய காரணங்களாக இருக்கும்.