Loading...
மஹாராஷ்ராவின் முதல் பெண் தேர்தல் கமிஷனரான நீலா சத்யநாராயண்(72) என்பவர் கொரோனாவுக்கு பலியானமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1972ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி நீலா சத்யநாராயண். ஓய்வுக்குப்பின் 2009ல் மஹாராஷ்ராவின் தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
Loading...
இதன்மூலம் மஹாராஷ்ராவின் முதல் பெண் தேர்தல் கமிஷனர் ஆனார். 2014 ஜூலையில் ஓய்வு பெற்ற இவர், மராத்தியில் பல புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.
Loading...