மத்திய பிரதேசம் மாநிலம் குணா மாவட்டத்தில் கல்லூரிக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் பொது மக்கள் ஆக்கிரமித்து இருந்தனர். இதனையடுத்து கடந்த செவ்வாய்கிழமையன்று போலீசார் அங்கியிருந்து மக்களை அடித்து பலவந்தமாக அகற்ற முயற்சி செய்தனர். அப்போது தலித் தம்பதியினர் தங்களை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் வைத்து இருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டனர்.
அவர்களை கொடூரமாக தாக்கிய பொலிசார் இழுத்து சென்றனர்.
பின்னர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர்கள் இருவரும் நலமாக உள்ளனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் நேற்றுமுன்தினம் இரவு குணா கலெக்டர் மற்றும் எஸ்.பி.-ஐ உடனடியாக நீக்க உத்தரவிட்டார். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க உயர் மட்ட விசாரணைக்கும் மத்திய பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
குணா சம்பவம் தொடர்பாக காங்கிரசின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். ராகுல் காந்தி டிவிட்டரில், இந்த மாதிரியான சிந்தனை மற்றும் அநீதிக்கும் எதிரான போராட்டம் நம்முடையது என பதிவு செய்து இருந்தார்.
மேலும் குணா சம்பவம் தொடர்பான வீடியோ பதிவையும் அதில் பதிவேற்றம் செய்து இருந்தார். அந்த வீடியோவில் ஒருவரை போலீசார் கடுமையாக தாக்கி தூக்கி செல்கின்றனர்.
हमारी लड़ाई इसी सोच और अन्याय के ख़िलाफ़ है। pic.twitter.com/egGjgY5Awm
— Rahul Gandhi (@RahulGandhi) July 16, 2020