உலகில் இருக்கும் மக்கள் பலருக்கும் பிரித்தானியா இளவரசி டயானாவை பற்றி தெரியாமல் இருந்திருக்காது. அவருடைய பெயரையாவது நிச்சயம் கேட்டிருப்பீர்கள்.
பிரித்தானிய அரச குடும்ப வாரிசை திருமணம் செய்து கொண்ட இவர், அடுத்த முடி இளவரசியாக இருந்த நிலையில், கார் விபத்து ஒன்றில் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆனால், இன்று வரை இவரின் மரணம் ஒரு மர்மமாகவே நீடிக்கிறது. அப்படி இருக்கையில் யார் இந்த டயானா? இவர் எப்படி உயிரிழந்தார்? நடந்தது என்ன? என்பது குறித்து இதுவரை நடந்த விபரங்களை இதில் தெளிவாக பார்ப்போம்.
டயானா கடந்த 1961-ஆம் ஆண்டு ஜுலை மாதம் 1-ஆம் திகதி, எட்வர்ட் ஜான் ஸ்பென்சர், பிரான்சஸ் ரூத் ப்ரூக் ரோஷே ஆகியோரின் மகளாக பிறந்தார்.
பிரித்தானியாவில் மிகப் பெரிய அந்தஸ்து கொண்டது டயானாவின் குடும்பம். இவருக்கு லேடி ஜேன் பெல்லோஸ் மற்றும் லேடி சாரா மெக்காக்யூடேல் என 2 சகோதரி மற்றும் சார்லஸ் பென்சர் என்ற 1 சகோதரன் இருந்தான்.
டயானா தனது பள்ளி படிப்பை ரிடில் ஒர்த் ஹால் ஸ்கூல் மற்றுமம் வெஸ்ட் ஹீத் ஸ்கூலில் படித்தார். இவர் படிக்கும் போது கூச்ச சுபாவம் உள்ள பெண்ணாகவும், மியூசிக் மற்றும் நடனத்தில் விருப்பம் கொண்ட பெண்ணாகவும் இருந்தார்.
பள்ளிப் படிப்பை முடித்த டயானா சுவிட்சர்லாந்தில் உள்ள கல்லூரில் ஒன்றி படித்தார். அதன் பின் லண்டனுக்கு திரும்பி, அங்கிருக்கும் கிண்டர் கார்டனில் பணியாற்றிய போது தான், இளவரசர் சார்லஸ் அறிமுகம் கிடைத்தது.
டயானாவை விட சார்லஸ் 13 வயது மூத்தவர், டயானா குழந்தையாக இருக்கும் போதே இளவரசர் சார்லஸிற்கு தெரியும்.
இவர்கள் குழந்தை பருவங்களில் ஒன்றாக விளையாடியவர்கள். மகாராணி இரண்டாம் எலிசெபத்திற்கு சொந்தமான பார்க் ஹவுஸில் டயனாவின் குடும்பம் வாடகைக்கு இருந்தது.
அதன் பின் இவர்களின் டேட்டிங்கை ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டன. இவர்கள் தொடர்பான புகைப்படங்கள் எல்லாம் அப்போது செம வைரல்.
அந்த காலக்கட்டத்தில் இவர்கள் ஒரு சிறந்த காதல் ஜோடியாக பார்க்கப்பட்டனர். இதையடுத்து இவர்கள் இருவருக்கும் கடந்த 1981-ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது.
அதன் பின், அதே ஆண்டு ஜூலை 29-ஆம் திகதி டயானாவிற்கும் சார்லஸிற்கும் திருமணம் செயிண்ட் பால் கதீட்ரல் தேவாலயத்தில் நடந்தது.
1982-ஆம் ஆண்டு ஜூன் 21-ஆம் திகதி டயானாவிற்கு முதல் குழந்தை பிறந்தது. அதற்கு வில்லியம்ஸ் என்று பெயரிட்டனர்.
1984-ஆம் ஆண்டு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது இதற்கு ஹென்ட்ரி சார்லஸ் ஆர்பர்ட் டேவிட் என பெயரிட்டனர். இவர் தான் தற்போது ஹாரி என அழைக்கப்படுகிறார்.
மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களின் திருமண வாழ்க்கையில் திடீரென்று மனக்கசப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் 1992-ஆம் ஆண்டு பிரிவதற்கு முடிவு செய்து, 1996-ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக பிரிந்துவிட்டனர்.
இருப்பினும் டயானாவின் மீது மீடியாக்களின் மோகம் குறையவில்லை. அவரை ஊடகங்கள் பின் தொடர்ந்து கொண்டே இருந்தன.
இப்படி ஒரு புறம் இருக்க, டயானாவிற்கு பாகிஸ்தானை சேர்ந்த ஒரு மருத்துவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவரும் நெருங்கி பழக துவங்கினர்.
இது மீடியாக்களில் அரசல் புரசலாக வெளியானது. இதனால் டயானா பற்றிய பல வதந்திகளும், சில உண்மை கலந்த வதந்திகளும் அதிகமாக பரவ துவங்கியது.
டயானாவிற்கு விவாகரத்தானாலும், அவரிடம் இளவரசி என்ற ராஜகுடும்ப உரிமை இருந்தது. ஆனால் டயானா எந்த நேரம் வேண்டுமானாலும் அதை விட்டு தர தயார் என அறிவித்திருந்தார்.
அன்றைய காலகட்டத்தில் எய்ட்ஸ் நோய் பரவில் இருந்தது. பல குழந்தைகளும் அதில் பாதிக்கப்பட்டனர். எச்ஐவி , எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக டயானா ஒரு டிரஸ்ட் துவங்கி உதவி செய்தார்.
அவர் பின்னால் இருந்த ஊடகங்கள் பல இது குறித்து செய்தி வெளியிட்டனர். அவர் விவாகரத்திற்கு பின்பு தன் மகன்களை வளர்பதிலும், சமூகசேவையிலும் தான் டயானா அதிகமாக ஈடுபட்டு வந்தார்.
இதற்கிடையில் டயானா எகிப்தில் உள்ள ஒரு சினிமா தயாரிப்பாளர் டூடி பயாத் உடன் டேட்டிங்கில் இருப்பதாக 1997-ல் செய்திகள் வெளியாகின.
தெற்கு பிரான்சில் அந்த டூடி பாயத்திற்கு சொந்தமான படகிற்கு டயானாவை அவர் அழைத்திருந்தார். இவர்கள் சர்தீனியா, தெற்கு பிரான்ஸ், மற்றும் பாரீஸ் ஆகிய நகரங்களில் டேட்டிங் செய்ததாக செய்தி வெளியாகின.
இந்நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 1997-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் திகதி டயானா மற்றும் டூடி பாயித் ஒரு காரில் செல்லும் போது அந்த கார் விபத்தில் சிக்கிவிடுகிறது. இதில் டூடி பாயித் மற்றும் காரின் டிரைவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துவிட்டனர்.
டயானாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதும், 2 மணி நேரத்தில் டயானா தன்னுடைய 36 வயதில் உயிரிழந்தார்.
இவரின் மரணம் உலகத்தையே உலுக்கியது. இருப்பினும் அவரது மரணம் குறித்து பல்வேறு கேள்விகள் எழும்பின.
அவர் இறந்தது திட்டமிடப்பட்ட விபத்து என்று ஒரு சிலரும், இந்த விபத்து ஏற்படும் நோக்கிற்கு மற்றவர்கள் செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டினர். அதனால் டயானாவின் மரணம் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டது.
டயானாவின் மரணம் குறித்து இங்கிலாந்து மற்றும் பாரீஸ் ஆகிய இரண்டு பொலிசாரும் விசாரித்தனர். இந்த சம்பவத்தின் போது டயானா சென்ற காரின் பின்னே ஒரு புகைப்படக்காரர் பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
அவர் விபத்து நிகழும் போது அதை காணக்கூடிய தூரத்தில் தான் இருந்துள்ளார். அவருக்கு பின்னால் சில புகைப்பட கலைஞர்கள் வந்துள்னர். அவர்கள் எல்லாம் டயனா விபத்தை புகைப்படம் எடுக்க துவங்கிவிட்டனர்.
இந்த விபத்து நடந்து 10 நிமிடத்தில் அந்த பகுதிக்கு பொலிசார் வந்துவிட்டனர். பொலிசார் வந்த 5-வது நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வந்துவிட்டது. டயானா உயிருடன் இருப்பதை அறிந்து அவர்கள் ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அப்போது அங்கிருந்த பொலிசார் அந்த பகுதியில் விபத்தை புகைப்படம் எடுத்த புகைப்பட கலைஞர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டடு அவர்களிடமிருந்த 20 பிலிம் ரோல்கள் பறிமுதல் செய்யப்பட்டனர்.
குறிப்பாக டயானா மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்படும் போது அவர் உடலில் காயங்கள் இல்லை.
அதன் பின் நடத்தப்பட்ட விசாரணையில், 1999-ஆம் ஆண்டு காரின் டிரைவர் மது போதையில் இருந்ததால் தான் விபத்து நடந்ததாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையில் பத்திரிக்கையாளர்கள் துரத்தியதால் தான் விபத்து நடந்ததாக பலர் பேசினர். ஆனால் பொலிசாரின் இந்த அறிக்கைக்கு பின்பு அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த விஷயத்தில் தீராத மர்மம் என்னவென்றால் டயானா சென்ற கார் எப்படி விபத்தில் சிக்கியது? காரை ஓட்டிய டிரைவர் பணி நேரத்தில் ஏன் குடி போதையில் இருந்தார். கார் வேகமாக பயணிக்க என்ன காரணம்? விபத்தில் ஒரு காயம் கூட இல்லாத டயானா எப்படி உயிரிழந்தார்? இந்த கேள்விகளுக்கு இன்று வரை ஒரு சரியான விடை கிடைக்கவில்லை. இதனால் டயானாவின் மரணம் மர்மமாகவே இருக்கிறது.