Loading...
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு அதிகாரம் வழங்கும் அரசியலமைப்பு மாற்றங்களுக்கு எதிராக மாஸ்கோவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 500 ஆர்ப்பாட்டக்காரர்கள் நகரின் முக்கிய தெருக்களில் அணிவகுத்து புடின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோஷமிட்டுள்ளனர்.
Loading...
அண்மையில் ரஷ்யாவில் அரசியலமைப்பை திருத்த ஒரு பொது வாக்கெடுப்பு நடந்தது. இதன் முடிவுப்படி மேலும் இரண்டு அதிபர் தேர்தலை தவிர்த்து, விளாடிமிர் புடினே அதிபராக தொடர அரசியலமைப்பு திருத்தப்பட்டது.
எவ்வாறிருப்பினும் புடினுக்கு எதிராக மக்கள் திரளாக போராட தொடங்கியுள்ளமை ரஷ்யாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Loading...