வட அமெரிக்க நில எல்லைகளின் மூலமான அத்தியாவசியமற்ற பயணங்களை கட்டுப்படுத்த தொடர்ந்தும் வட அமெரிக்க எல்லையை மூடுவதற்கு கனடாவும் அமெரிக்கவும் உடன்பட்டுள்ளன.
இதன்படி கனடாவும் அமெரிக்காவும் தற்போதைய எல்லை நடவடிக்கைகளை ஆகஸ்ட் 21 ஆம் திகதி வரை ஒரு மாதத்திற்கு நீட்டிக்க ஒப்புக் கொண்டுள்ளன.
இதேவேளை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் குறித்த எல்லை தொடர்பான 30 நாள் நீட்டிப்பை தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்த நிலையில்,
எல்லையின் இரு புறங்களில் மக்களை பாதுகாப்பாக வைத்திருக்க அண்டை நாடான அமெரிக்காவுடன் தொடர்ந்து பணியாற்ற தயாராகவுள்ளதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் செய்தியாளர் மாநாடொன்றில் தெரிவித்திருந்தார்.
இந்த பயணக்கட்டுப்பாட்டின் மூலம் கொரோனா பரவல் நிலையானது ஓரளவு கட்டுப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.