21 ஏப்ரல் 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புக்குப் பின்னர் கட்டுவபிட்டி தேவாலய தற்கொலை குண்டுதாரி ஆச்சி மொஹமட் ஹஸ்தூனின் மனைவி புலஸ்தினி ராஜேந்திரன் அல்லது சாரா என அழைக்கப்படுபவர் நாட்டை விட்டு வெளியேறியதாக எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று பாதுகாப்பு படைகள் வட்டாரங்கள் தெரிவித்தன.
அவர் இன்னும் நாட்டுக்குள் தலைமறைவாக இருக்கிறாரா என்று விசாரணை தொடர்ந்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
அவரும், ஏப்ரல் 26, 2019 அன்று சாய்ந்தமருதில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்ததாக பாதுகாப்புப் படையினர் சந்தேகித்தாலும், டி.என்.ஏ சோதனைகள் வேறுவிதமாக தெரியவந்தன.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் கிரியுல்லவில் உள்ள ஒரு கடையில் இருந்து வெள்ளை ஆடைகளை வாங்க வந்த ஒரு குழுவில் சாரா இருந்தமைக்கான சிசிடிவி காட்சிகள் அந்த நேரத்தில் ஊடகங்களால் ஒளிபரப்பப்பட்டன. தேசிய தவ்ஹீத் ஜமாத் (என்.டி.ஜே) திட்டமிட்ட இரண்டாவது தாக்குதலில் அந்த ஆடைகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று பாதுகாப்புப் படைகள் சந்தேகிக்கின்றன.
சாரா முதலில் ஒரு இந்து, ஆனால் பின்னர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் என்று பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பிறகு, அவர் ஹஸ்தூனை மணந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.
சாய்ந்தமருத்து குண்டுவெடிப்பில், பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் என்.டி.ஜே தலைவர் சஹ்ரான் ஹாஷிமின் குடும்ப உறுப்பினர்களும் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு முன்னர் சாரா இந்த பயங்கரவாத கும்பலின் உறுப்பினர்களை சந்தித்தாரா என்பது குறித்து பாதுகாப்பு படையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.