மேற்கு பிரான்ஸில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க சென்.பீற்றர்ஸ் அன்ட் சென்.போல் தேவாலயத்தில் நேற்று சனிக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரான்ஸ் நேரப்படி நேற்று காலை 7:44 மணிக்கு 100 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தேவாலயத்தில் பரவிய தீயை கட்டபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இத் தீ பரவல் காரணமாக தேவாலயத்தின் 16 ஆம் நூற்றாண்டு பழைமயான ரோஸ் சாளரத்திற்கும் பாடகர் பகுதிக்கும் ஓரளவு சேதம் ஏற்பட்டுள்ளது.
இத் தேவாலயம் குறித்து நாண்டஸ் மறைமாவட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இத் தீ விபத்து லோயர் அட்லாண்டிக் கிறிஸ்தவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்துகிறது.
அவர்களைப் பொறுத்தவரை, தேவாலயம், ஒரு கட்டடக்கலை தலைசிறந்த படைப்பு, எல்லாவற்றிற்கும் மேலாக மறைமாவட்டத்தின் தாய் தேவாலயம்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தீ விபத்தின் காரணத்தை அறிய பிரான்ஸ் பொலிசார் குற்றவியல் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, தேவாலயத்தின் கூரை கடந்த 1971 இல் இடம்பெற்ற பாரிய தீயில் எரிந்து நாசமாகியது. அதன் பிறகு புனரமைக்கப்பட்டது. எனினும் கடந்த 1944 இல் குண்டுவெடிப்பில் சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.