லண்டன் பேருந்தில் மோசமாக நடந்து கொண்டதோடு பெண் மற்றும் அவரது கணவரை தாக்கி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் தொடர்பில் பொலிசார் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர்.
லண்டன் பொலிசார் சிசிடிவி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உள்ள இளைஞனிடம் இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
தெற்கு லண்டனின் Bexley பேருந்தில் அந்த இளைஞன் கடந்த மாதம் 29ஆம் திகதி மதியம் 12.30 மணிக்கு ஏறியுள்ளார்.
பின்னர் பயணச்சீட்டுக்கு பணம் கொடுக்க மறுத்த அந்த இளைஞன், ஓட்டுனர் மீது எச்சில் துப்பிவிடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதையடுத்து பேருந்தில் உட்கார்ந்திருந்த வயதான தம்பதி அருகில் சென்ற இளைஞன், வயதான ஆண் நபரின் கைத்தடியை கால்களால் எட்டி உதைத்துவிட்டு அவர் மனைவியிடம் இருந்த செல்போனை திருடி கொண்டு பேருந்தில் இருந்து கீழே இறங்கி சென்றுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர், சிசிடிவி புகைப்படத்தில் உள்ள நபர் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக எங்களிடம் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.