பொதுவாக சிறுநீர் என்பது சாதாரண வெளிர்ந்த மஞ்சள் நிறமாக இருக்கும். இது ஒரு சிலருக்கு கொஞ்சம் மாறுதலான மஞ்சள் நிறத்திலும் வரக்கூடும்.
ஆனால் இதுவே மிகவும் அடர்ந்த கருப்பு கலந்த மஞ்சள் நிறமாக இருந்தால் அவ்வளவுதான். இந்த நிற சிறுநீர் பல ஆபத்துகளை கொண்டிருக்கிறது.
சிறுநீரானது கிட்னியில் இருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன. நாம் உட்கொள்ளும் திரவ பொருட்கள் செரிமானம் அடைந்து கிட்னிக்கு சென்று பின்பு சீறுநீராக வெளியேறுகிறது.
ஆனால், கிட்னிக்கு அதிக தண்ணீர் தேவைப்படும் போது கிடைக்கவில்லை என்றால் கிட்னி பாதிப்படைந்து கருப்பு நிற சிறுநீரை வெளியேற்றுகிறது.
இதே நிலை தொடர்ந்தால் சிறுநீரில் ரத்தமும் கலந்து சிவப்பாக வரக்கூடும் என ஆராய்ச்சிகள் சொல்கின்றன. இந்த நிலையில் நீங்கள் இருந்தால் கட்டாயம் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.
கருப்பு சிறுநீர் நோய்
- உங்கள் சிறுநீர் கருப்பாக உள்ளதென்றால் அதற்கு முதல் காரணம் இதுவாக தான் இருக்குமாம்.உடலில் tyrosine மற்றும் phenylalanine போன்ற ப்ரோடீன் பொருட்கள் நன்றாக உடைந்து சிறுநீராக வெளியேறவில்லையென்றால் அது கருப்பு நிற சிறுநீரை உருவாக்குகிறது.
- அத்தோடு சேர்த்து உங்கள் வியர்வையும் கருப்பாக வரக்கூடும். இதனால் உங்கள் முகம் கருமை அடைந்து தோன்றும். இந்த கருமை நிற சிறுநீருக்கு மூல காரணம் homogentisic acid-தான். மேலும் இந்த அமிலம் கொஞ்சம் கொஞ்சமாக கிட்னியில் உருவாகி, உயிருக்கே பாதிப்பை உண்டாக்கிவிடுகிறது.
சிறுநீரக புற்றுநோய்
- புற்றுநோய்கள் பலவிதமாக இருக்கிறது. குறிப்பாக மூளை, ரத்தம், கிட்னி இவைகளில் புற்றுநோய் ஏற்பட்டால் அதனை சரி செய்வது மிக கடினமான ஒன்று. உங்கள் சிறுநீர் நிறம் மாறும்போதே நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
- கிட்னியில் ஏதோ பாதிப்பு உள்ளது என்று. அதிலும் குறிப்பாக கருமை நிற சிறுநீர் வந்தால் நிச்சயம் உங்கள் கிட்னிக்கு பாதிப்பு உள்ளதென்று உணரலாம். கருப்பு சிறுநீர் சிறிது நாட்கள் செல்ல செல்ல ரத்தம் கலந்த சிறுநீரக வெளியேறும்.
- இதனை சிறுநீரக புற்றுநோய் என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த அறிகுறி இருந்தால் நிச்சயம் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.
தீர்வு
- உங்களுக்கு கருப்பு நிற சிறுநீர் வந்தால் நீங்கள் அண்மையில் உட்கொண்ட உணவுகளை பற்றி சிறிது யோசித்து பாருங்கள். ஏனென்றால் எடுத்து கொள்ளும் உணவின் வழியே இவை உருவாகும்.
- தினமும் 3- 5 லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும். நீர் பற்றாக்குறையே உடலில் பலவித நோய்களை ஏற்படுத்துகிறது.
- கருமை நிறத்தில் சிறுநீர் வந்தால் கட்டாயம் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். அப்படியே விட்டால் இது உங்கள் உயிருக்கே அழிவை தரும்.
- ஒவ்வொரு நாளும் நாம் சரியான விகிதத்தில் சாப்பிட வேண்டும்.