புதன் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் திட்டம் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
புதன் கிரகத்தின் காலநிலை மற்றும் வானிலை தொடர்பில் ஆராய்வதற்காக வடிவமைக்கப்பட்ட இந்த செய்மதி ஜப்பானிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
ஜப்பானின் Tanegashima விண்வௌி தளத்திலிருந்து, H2-A ரொக்கெட் ஒன்றினூடாக இந்த செய்மதி அனுப்பப்பட்டுள்ளது.
இது புதன் கிரகத்தை சென்றடைவதற்கு 500 மில்லியன் கிலோமீற்றர்கள் பயணிக்க வேண்டியுள்ளது.
கடந்த வாரம் செய்மதியை அனுப்புவதற்கு மேற்கொள்ளப்பட்ட இரண்டு முயற்சிகளும் மோசமான காலநிலை காரணமாக கைவிடப்பட்டிருந்தன.
2021 பெப்ரவரி மாதம் இந்தச் செய்மதி இலக்கைச் சென்றடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐக்கிய அரபு இராச்சியம் உருவாக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைகின்ற குறித்த மாதத்தில், இந்த மைல் கல்லை எட்டுவதற்கான முயற்சியாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது.