Loading...
ஹொங்கொங் உடனான நாடு கடத்தல் உடன்படிக்கையை இரத்து செய்யவுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
சீனாவுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஹொங்கொங் மீது சர்ச்சைக்குரிய பாதுகாப்புச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, மேற்கொள்ளப்படும் எதிர் நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.
Loading...
சீன தொழில்நுட்ப நிறுவனமொன்றின் 5G வலையமைப்பை, பிரித்தானியாவில் தடை செய்யும் தீர்மானமும் முன்னர் எடுக்கப்பட்டிருந்தது.
சர்ச்சைக்குரிய பாதுகாப்பு சட்டம் அமுல்படுத்தப்பட்டதை அடுத்து, 3 மில்லியன் ஹொங்கொங் பிரஜைகளுக்கு தமது நாட்டு குடியுரிமை வழங்கவுள்ளதாகவும் பிரித்தானியா அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் தமது நாட்டின் உள் விவகாரங்களில் பிரித்தானியா தலையிடுவதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.
Loading...