லெப்டோஸ்பிரோசிஸ் எனப்படும் (எலி காய்ச்சல்) நோயால் மொத்தம் 23,371 நோயாளிகள் இந்த வருடத்தின் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 17) வரையான காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் இந்த ஆண்டில் 10 க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் உயிரிழந்தமையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள், 3284 பேர் கொழும்பு மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த மாதம் (மே), பெப்ரவரி மற்றும் ஜனவரி மாதங்களில் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் இனம்காணப்பட்டனர். பெப்ரவரியில் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் 5363 பேர் பதிவாகியுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் இருந்து பதிவான நோயாளிகளின் எண்ணிக்கை 2253. மட்டக்களப்பு மாவட்டத்தில் 2230 பதிவாகியுள்ளனர். கடந்த ஆண்டில் (2019) நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மொத்தம் 6021 நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இரத்னபுரி மாவட்டத்திலிருந்து அதிக எண்ணிக்கையிலான 1245 பேர் பதிவாகியுள்ளனர். நவம்பர் மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான 1036 பேர் பதிவாகியுள்ளனர்.