பிரித்தானியாவில் நிலவி வரும் பணவீக்கத்திற்கு மேலாக ஏறக்குறைய 9,00,000 பொதுத்துறை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பது நியாயமானது என்று காவல்துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இருப்பினும், கொரோனா வைரஸ் காலத்தில் அதிகரித்த அழுத்தங்களைத் தொடர்ந்து 3.1% வரை ஊதிய உயர்வு அளிப்பது தொழிலாளர்களின் தகுதிக்கு வழங்க வேண்டியதை விட குறைவாக இருப்பதாக மருத்துவர்கள், ஆசிரியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சில அமைப்புகள் கூறின.
ஊதிய உயர்வு மற்ற துறைகளில் பணி நீக்கங்கள், தொழிலாளர்கள் குறைவதற்கும் வழிவகுக்கும் என்ற கவலையும் எழுப்பப்பட்டுள்ளது.
ஆனால், இந்த ஊதிய உயர்வு சுயாதீன ஊதிய மறுஆய்வு அமைப்புகளால் பரிந்துரைக்கப்பட்டது, அவை நியாயமானது என கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
மேலும் 2020-21 ஆம் ஆண்டிற்கான அவர்களின் அனைத்து பரிந்துரைகளையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டது என அமைச்சர் கிட் மால்ட்ஹவுஸ் தெரிவித்துள்ளார்.