Loading...
வென்னப்புவ பிரதேசத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. வென்னப்புவ – வைக்கால் பிரதேசத்தில் சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரில் மூவருக்கு கொரோனா தொற்றியமை உறுதியாகியுள்ளது.
அவர்கள் சிகிச்சைக்காக மினுவாங்கொட கொவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளர். பாதிக்கப்பட்ட குடும்பம் கடந்த 7ஆம் திகதி டுபாயில் இருந்து நாட்டு வருகை தந்துள்ளனர். அவர்கள் அக்குறண மற்றும் அலவத்துகொட பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும்.
Loading...
இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, 7 வயதுடைய மகன் என தெரிவிக்கப்படுகிறது.
Loading...