பிரித்தானியாவில் கார் மோதி சிறுமி உயிரிழந்த நிலையில் அவர் குடும்பத்தார் செய்துள்ள செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Warwickshireல் தன் வீட்டின் அருகில் Briya Kaur Gill (3) என்ற சிறுமி நின்று கொண்டிருந்தார்.
அப்போது கார் ஒன்று சிறுமி மீதி மோதிய நிலையில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து Birmingham நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு சிறுமி Briya கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை அவர் உயிரிழந்தார்.
இந்தியாவின் பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர் தான் Briya .
இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணொருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இது தொடர்பில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.
சிறுமி Briya-ஐ இழந்து தவிக்கும் இந்த நேரத்திலும் அவர் குடும்பத்தார் செய்துள்ள ஒரு செயல் மனதை நெகிழவைத்துள்ளது.
அதாவது Briya நினைவாக ஓன்லைனியில் அவர் குடும்பத்தார் நிதி வசூல் செய்தனர்.
கோரிக்கை விடுவிக்கப்பட்ட சில நாட்களிலேயே மொத்தமாக 2,700 பவுண்டுகளுக்கும் அதிகமாக நிதி வசூலாகியுள்ளது.
இந்த பணமானது Briyaன் உயிரை காப்பாற்ற பெரும் முயற்சியை மேற்கொண்ட குழந்தைகள் மருத்துவமனைக்கு வழங்கப்படவுள்ளது.
அந்த கோரிக்கை பதிவில் Birmingham நகர குழந்தைகள் மருத்துவமனையின் அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி, அவர்கள் வழங்கிய கவனிப்பு மற்றும் பெரும் ஆதரவை என்றும் மறக்க முடியாது என Briya குடும்பத்தார் சார்பில் கூறப்பட்டுள்ளது.