திருகோணமலை சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 423 மில்லிகிராம் ஹேரொயின் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவரை இன்று(22) கைது செய்துள்ளதாக சூரியபுர பொலிஸார் தெரிவித்தனர்.
லங்கா பட்டுமக, பள்ளிக்குளம், பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரையே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் பாணந்துறையிலிருந்து வியாபார நடவடிக்கைக்காக திருகோணமலை சூரியபுர பகுதிக்கு சென்ற நிலையிலே சந்தேக நபர் தொடர்பாக சூரியபுர பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, அவரிடம் இருந்து 423 மில்லிகிராம் ஹேரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு நாளைய தினம்(23) கந்தளாய் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.