பேரிச்சம் பழத்தில் காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்து, மாங்கனீசு, வைட்டமின் பி6, மக்னீசியம் போன்ற வளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், தினமும் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வருவது மிகவும் நல்லது பயக்கும்.
தினமும் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுப்பெறும். தினமும் இரண்டு பேரீச்சம்பழத்துடன் ஒரு தம்ளர் பால் பருகி வந்தால் ரத்தம் விருத்தியடையும்.
அத்தகைய பேரீச்சம் பழத்தை எந்த முறையில் சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும் என்று இப்போது பார்ப்போம்
கண்பார்வை
வைட்டமின் ஏ குறைவினால் ஏற்படும் கண்பார்வை குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்து. மேலும் இதனை தினமும் உண்டு வந்தால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்குமாம்.
மாலைக் கண் நோய்
மாலைக் கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்குமாம்.
செரிமான மண்டலம்
பேரிச்சம் பழம் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. செரிமான மண்டலத்தில் ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின், பேரிச்சம் பழத்தை தினமும் உட்கொண்டு வர, அதில் உள்ள நார்ச்சத்து இதனை குணப்படுத்தி விடும்.
நரம்புத் தளர்ச்சி
பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகுமாம்.
சர்க்கரை வியாதி
நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்ளுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவைப்படுவதால் தினமும் இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்குமாம்.
ஞாபக சக்தி அதிகரிக்கும்
தினமும் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால் மூளையின் செயல்பாடு மேம்படும். அதாவது ஞாபக சக்தி, ஒருமுகப்படுத்தும் தன்மை, கூர்மையான புத்தி, எதையும் எளிதில் கற்றுக் கொள்ளும் திறன் போன்றவை அதிகரிக்குமாம்.
இரத்த அழுத்தம்
பேரிச்சம் பழத்தில் உள்ள பொட்டாசியம், இதய செயல்பாட்டை மென்மையாக்கி, இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள வேண்டும். எனவே பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இரத்த சோகை
பேரிச்சம் பழத்தில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்து, உடலில் இரத்தணுக்களின் அளவை அதிகரித்து, இரத்த சோகை வரும் அபாயத்தைக் குறைக்குமாம். எனவே உங்கள் உடலில் இரத்தத்தின் அளவு சீராக இருக்க, தினமும் 3 பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வர வேண்டும்.
கர்ப்பிணி பெண்கள்
பேரிச்சம் பழத்தை கர்ப்ப காலத்தில் உட்கொண்டு வந்தால், பிரசவம் முடிந்த பின் உடல் எடையை குறைக்க உதவியாக இருக்குமாம்.