யுத்த நிறுத்தம் மற்றும் அனைத்துலக நடுநிலை என்பவற்றை விடுதலைப் புலிகள் அமைப்பினர் விரும்பியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் இதனை தெரிவித்துள்ளார்.
எனினும், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்கள் உயிருடன் இருப்பதை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிவ்சங்கர் மேனன் எழுதி வெளியிட்டுள்ள Choices: Inside the Making of India’s Foreign Policy என்ற நூலிலேயே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
குறித்த நூலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் உயிருடன் இருப்பதை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விரும்பவில்லை.
அனைத்துலக நடுநிலையையும், யுத்த நிறுத்தத்தையும், விடுதலைப் புலிகளின் தலைமைகள் விரும்பியிருந்தனர் அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், புலிகளின் தலைவர்கள் உயிருடன் இருப்பதையோ அல்லது விசாரணைகள் செய்வதற்காக அவர்களை கைதிகளாகப் பிடித்து வைப்பதையோ மஹிந்த ராஜபக்ச விரும்பவில்லை.
இதன் ஊடாக விடுதலைப் புலிகளின் தலைமை மற்றும் ஒரு போருக்குத் தயாராக முடியும் என மஹிந்த ராஜபக்ச நம்பிக்கை கொண்டிருந்ததாக சிவ்சங்கர் மேனன் தனது நூலில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.