பிரித்தானியாவில் இன்று முதல் கடைக்குச் செல்வோர் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்ற புதிய விதிகள் அமுல்லு வர உள்ளது.
குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் மீறுவோருக்கு 100 பவுண்டுகள் பிழையும் விதிக்கப்பட உள்ளது.
இந்த புதிய மாஸ்க் கட்டாயம் என்ற விதியானது எங்கெல்லாம் கண்டிப்பாக செயல்பாட்டுக்கு வர உள்ளது என்ற தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.
கடைகள், பல்பொருள் அங்காடிகள், வணிக மையங்கள், வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களிலும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்.
இதே விதி ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கும் பொருந்தும். துரித உணவகங்களுக்குள் சென்று உணவருந்துபவர்கள் மாஸ்க் அணிவது கட்டாயமல்ல,
ஆனால் உணவுப் பொட்டலங்களை வாங்கிச் செல்பவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்.
வங்கி அல்லது தபால் நிலையங்களில் உங்கள் அடையாளத்தை அவர்கள் சரிபார்க்க வேண்டும் என்ற தேவை ஏற்பட்டால், உங்கள் மாஸ்க்கை அகற்றுமாறு கேட்கப்படலாம்.
மேலும், மதுபானம் மற்றும் சிகரெட் போன்ற வயது வரம்புக்குட்பட்ட தயாரிப்புகளை விற்கும் கடைகளில் உங்கள் மாஸ்க்கை அகற்ற கேட்கலாம்.
ஆனால் பப்கள், சினிமா அரங்குகள், தியேட்டர், முடி திருத்தும் நிலையம், கண் பரிசோதனை மையம் அல்லது பல் மருத்துவர்களிடம் உங்கள் முகத்தை மறைக்க வேண்டிய அவசியமில்லை.
மேலும் அதிக கூட்டமாக காணப்படும் பகுதிகளில் மாஸ்க் கட்டாயம் என கூறப்படுகிறது, இருப்பினும் சாலையில் தனியாக நடந்து செல்லும் ஒருவர் மாஸ்க் அணிவது கட்டாயமல்ல எனவும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஜேர்மனி, இத்தாலி உள்ளிட்ட பல நாடுகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்ட சில வாரங்களுக்குப் பிறகு பிரித்தானியா கடைசியாக கடைகளுக்குச் செல்வோர் மாஸ்க் அணிவது கட்டாயம் என்ற விதியை இன்று முதல் அமுலுக்கு கொண்டு வருகிறது.