உத்தியோக முயற்சியில் அனுகூலம் கிடைக்கும் நாள். வளர்ச்சிக்கு முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் ஏற்பட்ட பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும்.
செல்வந்தர்களின் வருகையால் சிறப்படையும் நாள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை புதுப்பிக்கும் எண்ணம் ஏற்படும். கடிதம் மூலம் சுபச் செய்திகள் வந்து சேரலாம். வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும்.
குதூகலம் கூடும் நாள். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம். குடும்ப முன்னேற்றம் கருதி புதிய திட்டமொன்றைத் தீட்டுவீர்கள். பெற்றோர் நலனில் அதிக அக்கறை தேவை.
நட்பு வட்டம் வரிவடையும் நாள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையடைய சந்தர்ப்பம் கைகூடிவரும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கும் எண்ணம் மேலோங்கும். வழக்குகள் சாதகமாகும்.
துன்பங்கள் தூளாகும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அலுவலகப்பணிகள் துரிதமாக நடைபெறும். ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்பால் தொழில் முன்னேற்றம் காண்பீர்கள்.
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். கடின முயற்சிக்குப் பின்னால் காரியங்களில் வெற்றி கிடைக்கும். கொடுக்கல்– வாங்கல்களை ஒழுங்கு செய்து கொள்ள முன்வருவீர்கள். வரவு வந்த மறுநிமிடமே செலவாகலாம்.
வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழும் நாள். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும். உங்களின் திறமையான செயல்பாடுகளைப் பார்த்து மற்றவர்கள் வியப்படைவர்.
பாராட்டும், புகழும் கூடும் நாள். வருமானம் இருமடங்காகும். வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து உறவினர்கள் உதவுவர். இடம், பூமியால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். திடீர் பயணம் தித்திக்க வைக்கும்.
விருப்பங்கள் நிறைவேற விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை வைக்கும் நாள். பணப்பற்றாக்குறை அகலும். உதாசீனம் செய்தவர்கள் உங்களின் செயல்பாடுகளைக் கண்டு பெருமை அடைவர்.
காரிய வெற்றி ஏற்படும் நாள். வாழ்க்கைத் துணை வழியே வரவு வந்து சேரும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். திருமண முயற்சி வெற்றி தரும்.
தெய்வ வழிபாட்டால் திருப்தி காண வேண்டிய நாள். அதிக விலை கொடுத்துச் சில பொருட்களை வாங்கியும் திருப்தி இல்லாமல் போகலாம். செய்தொழிலில் வேலையாட்களால் பிரச்சினைகள் ஏற்படலாம்.
பாக்கிகள் வசூலாகிப் பரவசமடையும் நாள். பிள்ளைகளின் வேலை வாய்ப்பு கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.தொழில் முன்னேற்றம் கூடும். உறவினர்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள்.