யாழ் திருநெல்வேலி பொது சந்தை வாசலில் பெண் ஒருவரை ஆசாமியொருவர் கையடக்க தொலைபேசியில் வீடியோ படம் எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குறிப்பிட்ட பெண், முகக்கவசம் அணியவில்லை என்று சுகாதார அதிகாரி அந்த பெண்ணிடம் உரையாடிக் கொண்டிருக்கும் போது பிரதேச சபை ஊழியரான ஆசாமியொருவர், அப் பெண்ணை கைத்தொலைபேசி மூலம் வீடியோ எடுக்க முற்பட்டார்.
அது குறித்து அந்த பெண் வினவி கைத்தொலைபேசியை வாங்க முற்பட, தகாத வார்த்தைகளால் பேசியபடி ஒருவர் அப் பெண்ணை தாக்க முயன்றுள்ளார்.
இந்த ஆசாமிக்கு எதிராக உரிய நடவடிக்கையெடுக்க வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி தலைவி வாசுகி சுதாகர் வலியுறுத்தியுள்ளார்.
பொது இடத்தில் முகக்கவசம் அணியவில்லையென ஒருவரை அறிவுறுத்தும் சமயத்தில், அந்த விவகாரத்தை இன்னொருவர் வீடியோ புகைப்படம் எடுக்க சுகாதார பரிசோதகர் அனுமதிப்பது, குறிப்பிட்ட நபரின் தனியுரிமையை மீறும் செயலாகும்.