அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் படம் இமைக்கா நொடிகள். இந்த படத்தில் அவருடன் அதர்வா, ராசி கண்ணா உள்பட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தில் நயன்தாராவின் தம்பியாக அதர்வா நடிக்கிறார்.
கதைப்படி நயன்தாரா வாழ்க்கையில் நடக்கும் ஒரு பிரச்சினைக்காக அவர் போடுவதுதான் கதையாம். இப்படத்தில் நயன்தாரா காக்கி சட்டை அணிந்த பொலிஸாக நடிப்ப தாக கூறப்படுகிறது.
மேலும், இப்படத்தில் நயன்தாரா நான்கு வயது குழந்தைக்கு அம்மாவாக நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், அப்படி அவருக்கு மகளாக நடிப்பது மானஸ்வி என்கிற குழந்தை நட்சத்திரம் என்று இப்போது தெரிய வந்துள்ளது.
இந்த மானஸ்வி காமெடி நடிகர் கொட்டாச்சியின் மகள் ஆவார். இவர் ஏற்கனவே உன்னோடு கா, வல்லவனுக்கு வல்லவன் உள்பட சில படங்களில் டப்பிங் கொடுத்து வருபவர், சதுரங்கவேட்டை-2, ஏதோ வானிலை மாறுதே, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களில் தற்போது குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார்.
இதில் இமைக்கா நொடிகளில் நயன்தாராவின் மகளாக நடிப்பதுதான் அவருக்கு ஹைலைட்டாக அமைந்துள்ளது.
காரணம், மானஸ்வியை சுற்றியும் சில முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளதாம். அதனால் இந்த படத்திற்கு பிறகு தனக்கு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கும் மானஸ்வி, அடுத்தபடியாக அஞ்சலி படம் போன்று குழந்தைகளை மையமாகக் கொண்ட கதைகளில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறாராம்.