ஆஸ்திரியாவில் குடும்பத்தார் மற்றும் இரண்டு வளர்ப்பு நாய்களை கொடூரமாக சுட்டு கொலை செய்த இளம் பெண்ணின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரியா நாட்டின் Boheimkirchen மாகாணத்தைச் சேர்ந்தவர் Martina. இவருக்கு சமீபத்தில் இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளைடைவில் காதலாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இவர் தன் காதலுடன் உறவு வைத்து கொள்வதற்காக வீட்டில் இருந்த மூன்று குழந்தைகளான Sebastian (10), Fabian ( 9) ,Michelle ( 7) என்பவரை சுட்டு கொலை செய்துள்ளார்.
அதுமட்டுமின்றி தன்னுடைய உறவினரான Peter (41) மற்றும் பாட்டியையும் Mathilde (59) சுட்டு கொலை செய்துள்ளார். அதன் பின்னர் தன் காதலனுக்கு குறுந்தகவல் அனுப்பி வரவைத்து உல்லாசமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து வளர்ப்பு நாய்கள் இரண்டையும் சுட்டுத் தள்ளியுள்ளார். ஆனால் அவை இரண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் மறுநாள் Martina-வும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. குழந்தைகள் பள்ளிக்கு வராததால் பள்ளி நிர்வாக வீட்டிற்கு தொடர்பு கொண்டுள்ளது. அவர்கள் பதில் அளிக்காத்தால் வீட்டிற்கு வந்த பின்னரே இச்சம்பவம் தொடர்பாக தெரிய வந்துள்ளது.
மேலும் இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், 6 பேர் இறந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.