மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஜெயலிதாவின் நீண்ட நாள் தோழியான கீதா பரபரப்பை கிளப்பியுள்ளார்.
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றம்சாட்டிய கீதா, ஜெயலலிதா விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜெயலலிதாவின் உறவினர் தீபா-வுக்கு தனது ஆதரவு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக சென்னை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில், ஜெயலலிதாவின் மரணத்தை சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சசிகலா, நடராஜன், இளவரசி, அப்பல்லோ பிரதாப் ரெட்டி, முதல்வர் பன்னீர் செல்வம், தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ், ஆலோசகர் ஷீலா பாலாகிருஷ்ணன், சிகிச்சை அளித்த டாக்டர் சிவகுமார், காவல் துறை ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட 20 பேரிடம் விசாரணை நடத்தவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பதவி, அதிகாரம், சொத்து ஆகிய காரணங்களுக்காக கொலை செய்ய, தவறான சிகிச்சை அளிக்க முன்வந்ததாக சந்தேகம் எழுந்துள்ளாதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.