தனது காலத்தில் எந்தவொரு சிறந்த அமைச்சும் இருக்கவில்லை எனவும், சிறந்த ஜனாதிபதியே இருந்தார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தமது ஆட்சிக் காலத்தில் எந்தவொரு சிறந்த அமைச்சும் இருக்கவில்லை. சிறந்த ஜனாதிபதியே இருந்தார்.
சிறந்த முறையில் பணியாற்றினால் சகல அமைச்சரும் சிறந்தவர்கள்.
உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொள்ளைக்கைக்காக தேர்தலில் போட்டியிடப் போகின்றேன்.
எதிர்வரும் மார்ச் மாதம் தேர்தலை நடாத்துவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.