Loading...
உலகில் மிகப் பெரிய தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் நிறுவனமான கூகுள் நிறுவனம் தனது நிறுவனத்தில் பணிப்புரியும் இரண்டு லட்சம் ஊழியர்களை மேலும் ஒருவருடத்திற்கு வீடுகளில் இருந்து பணியாற்றுமாறு அறிவித்துள்ளதாக கூகுள் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் திகதி வரை வீடுகளில் இருந்து பணியாற்றுமாறு கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அறிவித்துள்ளது.
Loading...
கடந்த வாரம் நிறுவனத்தின் உயர் முகாமைத்துவ அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானத்தை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Loading...