மறைந்த எழுத்தாளரும், நடிகருமான சோ ராமசாமியை பற்றி அவருடன் கடைசி வரை நெருக்கமாக இருந்த நடிகர் ஜெய்சங்கர் மகனான பிரபல கண் மருத்துவர் விஜய்ஷங்கர் சில சுவாரசிய விடயஙளை பகிர்ந்து கொண்டார்.
அதில், சோ ராமசாமிக்கு மிகவும் பிடித்த நடிகர் அஜித் தான் என கூறிய அவர், அஜித் படங்கள் எல்லாவற்றையும் தவறாமல் அவர் பார்த்து விடுவார் என கூறியுள்ளார்.
மேலும், அஜித் அழகு மற்றும் கம்பீரத்தை பார்த்து சோ பல தடவை வியந்து அவரை பற்றி தன்னிடம் கூறியதையும் விஜய ஷங்கர் நினைவுகூர்ந்துள்ளார்.
அஜித் எந்த பிரச்சனைக்கும் போகாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பதையும் சோ அதிகம் ரசிப்பார் எனவும் அவர் கூறியுள்ளார்.
அதே போல சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த் தான் சோவின் நெருங்கிய நண்பர் எனவும், அவர்கள் அடிக்கடி சந்தித்து பல விடயங்களை பற்றி பேசி கொள்வார்கள் எனவும் விஜய் ஷங்கர் தெரிவித்துள்ளார்.