கிளிநொச்சி அக்கராயன்குளம் பிரதேசத்தை தனி பிரதேச செயகப் பிரிவாக மாற்றும் நடவடிக்கையினை நான் மீண்டும் முன்னெடுப்பேன். கோணாவில் கிராம அலுவலர் பிரிவை மூன்று கிராம அலுவலர் பிரிவுகளாக பிரிப்பதன் மூலம் இதனை இலகுவாக மேற்கொள்ள முடியும் என கேடயச் சின்னத்தில் சுயேச்சைக் குழு 5 இல் போட்டியிடுகின்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இன்று(30) கிளிநொச்சி ஸ்கந்தபுரரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும ் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
நான் அதிகாரத்தில் இருந்த காலத்தில் அக்கராயன்குளம் பிரதேசத்தை தனி பிரதேச செயலக பிரிவாக மாற்றுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு தூரநோக்கற்ற விசன்,மிசன் இல்லாத அரசியல்வாதியொருவர் மக்களை குழப்பி தடையை ஏற்படுத்தினார். ஆனால் நான் இந்த தேர்தலின் பின்னர் மீண்டும் அந்த முயற்சியை மேற்கொள்வேன். கடந்த காலத்தில் அக்கராயன்குளம் பிரதேச செயலக பிரிவுடன் இணைவதற்கு சில கிராம அலுவலர் பிரிவு மக்கள் விருப்பம் தெரிவித்திருக்கவில்லை எனவே அவர்களது உணர்வுகளை மதித்து அவர்களது விருப்பத்திற்கு மாறாக நடக்காது அதிகளவு மக்கள் வாழ்கின்ற கோணாவில் கிராம அலுவலர் பிரிவை மூன்றாக பிரிப்பதன் ஊடாக அக்கராயன்குளம் பிரதேசத்தை தனியான பிரதேச செயலக பிரிவாக மாற்ற முடியும் எனத் தெரிவித்த அவர்அதன் மூலம் இந்த பிரதேசத்தை விரைவான முன்னேற்றமடையும் பிரதேசமாக மாற்றமுடியும் எனவும் தெரிவித்த அவர் மக்கள் எப்பொழுதும் தங்களின் பிரதிநிதிகளை தெரிவு செய்கின்ற போது மக்களுக்கு அர்ப்பணிப்பு மிக்க சேவை செய்கின்றவர்களை தெரிவு செய்ய வேண்டும் எனவேதான் நான் நம்புகின்றேன். கடந்த ஐந்து வருட அனுபவத்திலிருந்து இந்த தேர்தலில் மக்கள் மாற்றத்திற்காக கேடயச் சின்னத்தை தெரிவு செய்வார்கள் என்று .எனக்குறிப்பிட்டார்.