கொரோனா பரவிவரும் சூழலில் தபால் மூலம் அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றால் மோசடிகள் ஏற்பட வாய்ப்புள்ளது, எனவே தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆளும் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும் எதிர்கட்சியான ஜனநாய கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிடுகின்றனர். இதனிடையே இருவரும் கொரோனாவுக்கு மத்தியிலும் தீவிர பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதில் கொரோனா வைரஸ் பரவல், மற்றும் பொருளாதாரம் தொடர்பான விவகாரங்களில் அதிபர் ட்ர்ம்பின் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக கருத்துக்கணிப்புகளில் ஜோ பைடனை விட ட்ரம்ப் பின் தங்கியுள்ளார்.
இதில் அரிசோனா, புளோரிடா, மிச்சிகன், வட கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய மாநிலங்களில் நடந்த கருத்துக்கணிப்புகளில் சராசரியிலும் அதிபர் ட்ரம்ப் பின்தங்கியுள்ளார். இதனால் அதிபர் தேர்தலில் வெற்றிபெற தேவையான அனைத்து முயற்சிகளையும் ட்ரம்ப் மேற்கொண்டு வருகிறார். இதனிடையே இரண்டாவது காலாண்டில் அமெரிக்காவின் பொருளாதாரம் 32.9% வேகத்தில் குறைந்துவிட்டதாக வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது. இது அதிபர் ட்ரம்புக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் தபால் மூலம் அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றால் மோசடிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தபால் மூலம் அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றால் 2020 ஆம் ஆண்டு தேர்தல், வரலாற்றில் மிகவும் தவறான மற்றும் மோசடியான தேர்தலாக இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் “இது அமெரிக்காவிற்கு பெரும் சங்கடமாக இருக்கும். எனவே மக்கள் முறையாகவும், பாதுகாப்பாகவும், வாக்களிக்கும் வரை தேர்தலை தாமதப்படுத்துங்கள் ??? என ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.
அதிபர் தேர்தலை ஒத்திவைக்கும் அதிகாரம் அதிபருக்கு இல்லை, அது அமெரிக்க காங்கிரஸிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
#BREAKING | நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலை ஒத்திவைக்க வேண்டுமென முதல் முறையாக அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தல்!https://t.co/5wMBD3FLqB #USPresidentialElection #USElection @realDonaldTrump #Trump pic.twitter.com/FVE00hJXD3
— News7 Tamil (@news7tamil) July 30, 2020
With Universal Mail-In Voting (not Absentee Voting, which is good), 2020 will be the most INACCURATE & FRAUDULENT Election in history. It will be a great embarrassment to the USA. Delay the Election until people can properly, securely and safely vote???
— Donald J. Trump (@realDonaldTrump) July 30, 2020