லங்காபுர பிரதேசத்தில் தற்போது வரையில் பீ.சி.ஆர் பரிசோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
லங்காபுர பிரதேச செயலகத்தின் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்றுக்குள்ளானதைத் தொடர்ந்து குறித்த பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து குறித்த பகுதியில் நேற்று முன்தினம் கொவிட்-19 தொற்று உறுதியானவரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கே நேற்று தொற்று உறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்காவில் அண்மைக்காலங்களில் கொரோனா தொற்றாளர்கள் ஆங்காங்கே அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
இதற்கு முன்னரும் ராஜாங்கனை பகுதியில் கொரோனா தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் அந்த இடம் முழுதும் கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த கட்டுப்பாடுகள் நேற்று கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதுடன், தற்போது லங்காபுர பிரதேசம் முடக்கப்பட்டுள்ளது.
மேலும் ஸ்ரீலங்காவில் 2,391 பேர் குணமடைந்துள்ள நிலையில், 413 பேர் நாட்டிலுள்ள பல்வேறு வைத்தியசாலைகளிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.