சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்து வருகின்றது. அமெரிக்காவில் மட்டும் ஒவ்வொரு நிமிடத்திற்கு ஒருவர் கொரோனாவால் உயிரிழந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.
அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,50,000 மேல் சென்றுள்ளது. கடந்த புதன் கிழமை மட்டும் 1456 பேர் பலியாகியுள்ளனர். கடந்த ஒரு மாதங்களில் இந்த இறப்பு தான் அதிகம் என்று கூறப்படுகின்றது.
கடந்த வாரங்களில் அமெரிக்காவில் உயிரிழப்பு அதிகரித்து வந்தாலும், ஒவ்வொரு வாரமும் அதிகரிக்கும் தொற்று சதவீதம் குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு சில மாநிலங்களை லாக்டவுனை தகர்த்துள்ளதால் தற்போது தொற்று அதிகரிப்பதற்கு காரணம் என்று கூறப்படுகின்றது.
உலக அளவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் மக்கள் தொகை அடிப்படையில் பார்க்கும்போது அமெரிக்கா ஆறாவது இடத்தில் உள்ளது. இங்கு ஒரு லட்சம் பேருக்கு 45 பேர் உயிரிழந்துள்ளனர். பிரிட்டன், இத்தாலி, பெரு, ஸ்பெயின், சிலி ஆகிய நாடுகளில் உயிரிழப்பு விகிதம் அதிகமாக இருந்து வருகின்றது.