வைட்டமின் D’ சத்து குறைவாக உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் எளிதில் தொற்றிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் ஆபத்தான விகிதத்தில் தொடர்ந்து பரவி வருகின்ற நிலையில், விஞ்ஞானிகளும் மருத்துவ ஆராய்ச்சியாளர்களும் இந்த தொற்றுநோயைப் புரிந்துகொள்ள முயற்சித்து வருகிறார்கள்.
குறிப்பாக வயதானவர்கள், மற்றும் வேறுசில நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலைக்கு செல்கின்றனர்.
இப்போது, இரத்த பிளாஸ்மாவில் குறைந்த அளவு வைட்டமின் டி .இருந்தால் கொரோனா (COVID-19) நோய்த்தொற்றுக்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
பாலினம், வயது, நாள்பட்ட மன மற்றும் உடல் கோளாறுகள் மற்றும் சமூக பொருளாதார நிலை போன்ற பிற காரணிகளில் எந்த பிரச்சனை இல்லை என்றாலும்., குறைந்த அளவு வைட்டமின் டி உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று பரவும் வாய்ப்பு அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. அதேசமயம் இந்த தொற்றால் இறக்கும் வாய்ப்பு மிகக் குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டது.
தற்போதைய நிலையில் வைட்டமின் D சத்து சூரிய வெளிச்சத்தின் மூலமாக இயற்கையாகவே கிடைக்கக் கூடியது. எனவே தினமும் காலை அல்லது மாலையில் வெளியில் 20 நிமிடம் சூரிய குளியல் நடப்பது நல்லது.
அதேபோல் முட்டை, காளான் போன்ற உணவுகளிலும் வைட்டமின் D சத்து அதிகமாக உள்ளது. அதை எடுத்துக்கொள்ள வேண்டும்.