Loading...
பொதுவாக நம்மில் பலருக்கு காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக காபி குடிக்கும் பழக்கம் இருக்கும்.
ஆனால் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லதல்ல. அதற்கு மாறாக வேறுசில ஆரோக்கியமான மற்றும் சுவையான பானங்களைக் குடிக்கலாம்.
இதனால் உடல் புத்துணர்ச்சி பெறுவதோடு, உடலுறுப்புக்களின் செயல்பாடுகளும் சிறப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
Loading...
ஏனெனில் ஒருவர் காலையில் ஆரோக்கியமான பானங்களைக் குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தால், அவரது வாழ்நாளை நீட்டிக்கலாம் என கூறப்படுகின்றது.
அந்தவகையில் காலையில் காபிக்கு பதிலாக குடிக்க வேண்டிய சில ஆரோக்கிய பானங்கள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.
- காலையில் காபிக்கு பதிலாக வேண்டுமானால் டீ அருந்துங்கள். டீ என்று வரும் போது, அதில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் க்ரீன் டீ, மட்சா டீ, மசாலா டீ போன்றவை மிகச்சிறப்பானவை.
- மட்சா டீயை எடுத்துக் கொண்டால், அதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால், இது கல்லீரலுக்கு பாதுகாப்பளிக்கும், மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும் மற்றும் பல உள்ளுறுப்புக்களுக்கு நன்மை அளிக்கக்கூடியது.
- இளநீரில் எலக்ட்ரோலைட்டுகள் முழுமையாக நிறைந்துள்ளதால், எனர்ஜி பானங்களுக்கு ஒரு சிறந்த மாற்று பானமாக இருக்கும்.
- காலையில் இஞ்சி, ஏலக்காய், மஞ்சள் மற்றும் மிளகுத் தூள் சேர்த்த பாலை அருந்துவது மிகவும் நல்லது. ஏனெனில் இதை ஒருவர் காலையில் எழுந்ததும் குடிக்கும் போது, உடல் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்பாகவும் இருப்பதோடு, உடல் நன்கு ஆரோக்கியமாக இருப்பதையும் உணர முடியும்.
- எலுமிச்சை நீரில் ஏராளமான வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. அதோடு இதில் கலோரி மற்றும் காப்ஃபைன் போன்றவை இல்லை. ஆகவே இது ஒரு நாளை ஆரம்பிப்பதற்கான சிறப்பான பானமாக இருக்கும்.
- காலையில் எழுந்ததும் காபிக்கு பதிலாக ஒரு டம்ளர் மோர் குடிப்பது மிகவும் நல்லது. இதனால் இரைப்பை குடல் சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும். நீங்கள் அஜீரண கோளாறு, வாய்வுத் தொல்லை மற்றும் பிற செரிமான பிரச்சனைகளால் அவஸ்தைப்பட்டு வந்தால், தினமும் காலையில் ஒரு டம்ளர் மோரை வெறும் வயிற்றில் குடியுங்கள்.
- காலையில் குடிப்பதற்கு ஏற்ற ஒரு சிறந்த புரோபயோடிக் பானம் என்றால் கொம்புச்சாவைக் கூறலாம். ஏனெனில் பானங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு கூடுதல் நன்மைகளை வழங்கும் மற்றும் குடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும்.
- சிறிய பீட்ரூட்டை நறுக்கி ஜூஸரில் போட்டு, அதன் பின் 1 கிரேப்ஃபுரூட்டின் சதைப் பகுதி, ஒரு கையளவு பசலைக்கீரை, சிறிது இஞ்சி போன்றவற்றை அடுத்தடுத்து சேர்த்து ஜூஸ் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது பிங்க் இமாலயன் உப்பு சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இந்த பானத்தை காலையில் காபிக்கு பதிலாக குடிப்பது மிகவும் நல்லது.
Loading...