ஹெரோயின் போதைப் பொருளை கழுத்தில் கட்டி வெலிக்கடை சிறைச்சாலைக்கு அனுப்ப தயாராக வைக்கப்பட்டிருந்த பூனை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய குறித்த பூனை பிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, பூனையில் கழுத்தில் இருந்து 1.7 கிராம் ஹெரோயின், இரண்டு சிம் அட்டைகள் மற்றும் நினைவக அட்டை (memory card) ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் வெலிகடை சிறைச்சாலையில் வீசப்பட்ட பார்சல்களில் இருந்து 30 க்கும் மேற்பட்ட மொபைல் போன்கள் மற்றும் பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
38 மொபைல் போன்கள், 264 பட்டரிகள், 20 சிம் கார்டுகள் மற்றும் 3.5 கிராம் ஹெரோயின் ஆகியவை கடந்த மாதம் பார்சல்களில் இருந்து மீட்கப்பட்டதாக சிறைத் துறை தெரிவித்துள்ளது.
சில தினங்களின் முன்னர் போதைப்பொருள்கடத்தலுக்கு பாவிக்கப்பட்ட பருந்து ஒன்று மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.