Loading...
நம்மில் பல பேருக்கு மிகவும் பிடித்த நொறுக்குத் தீனியில் பக்கோடா.
Loading...
அந்த பகோடாவை மொறுமொறுப்பாக யாழ்ப்பாண முறையில் சுவையாக எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கடலை பருப்பு – 250 கிராம்
- உள்ளிப்பல் – 12
- கருவேப்பிலை – சிறிதளவு
- மிளகாய் துகள்கள் – 1 1/2 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- பெருஜீரகம் – 1/2 தேக்கரண்டி
- ஓமம் – 1/2 தேக்கரண்டி
- எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
செய்முறை
- கடலை பருப்பை 8 மணிநேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
- மிளகாயை வெறும் கடாயில் வறுத்து துகள்களாக அரைத்துக் கொள்ளுங்கள்.
- உள்ளிப்பல்லையும் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும், ஓமத்தை இடித்து எடுத்துக் கொள்ளவும்.
- அரைத்த கடலை பருப்புடன் அரைத்த உள்ளிப்பல்,கருவேப்பிலை,மிளகாய் துகள்கள்,பெருஜீரகம் மற்றும் ஓமம் சேர்த்து மாவை நன்றாக பிசைந்து கொள்ளவும்.
- பின் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் மாவை சிறிய துண்டுகளாக மிதமான தீயில் பொரித்து எடுத்தால் மொறுமொறுப்பான யாழ்ப்பாண பகோடா தயார்.
Loading...