Loading...
சொரியாசிஸ் என்பது தோல் அழற்சி நிலையாகும். இதை மீன் செதில் படை என்றும் அழைக்கலாம்.
உலகில் பலர் இந்த சொரியாசிஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தோலில், மீன் செதில் போன்று இறந்த செல்கள் உதிர்ந்து விழும் புரையுடன் கூடிய வெண்மை மற்றும் சிவப்பு திட்டுகளாக காணப்படும்.
Loading...
உடலின் எந்தப்பாகத்தில் வேண்டுமானாலும் வரலாம். முழங்கை, முழுங்கால் மூட்டு, முதுகு, தலையுச்சி முதலிய பாகங்கள் பொதுவாக பாதிக்கப்படும்.
இதற்கு என்று பிரத்யேகமாக க்ரீம்களும் விற்கப்படுகின்றன. ஆனால் சொரியாசிஸ் பிரச்சனைக்கு ஒருசில வீட்டு வைத்தியங்கள் உள்ளன.தற்போது அவை என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
- சொரியாசிஸ் பிரச்சனைக்கு நற்பதமான கற்றாழை இலையை எடுத்து, அதில் உள்ள ஜெல்லை ஸ்பூன் கொண்டு எடுத்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவ வேண்டும். ஒருவேளை உங்கள் வீட்டில் கற்றாழை செடி இல்லாவிட்டால், கடைகளில் விற்கப்படும் கற்றாழை ஜெல்லை வாங்கி பயன்படுத்தலாம்.
- சொரியாசிஸ் பிரச்சனையால் ஏற்படும் அரிப்புக்களைத் தடுக்க ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் சரிசம அளவில் கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் பஞ்சுருண்டைப் பயன்படுத்தி தடவ வேண்டும். ஒருவேளை சருமத்தில் அரிப்புக்களால் காயங்கள் அல்லது வெடிப்புக்கள் ஏற்பட்டிருந்தால், இந்த வழியைத் தவிர்க்க வேண்டும்.
- மிளகாயை நீங்கள் பயன்படுத்தும் அழற்சிக்கான க்ரீம்களில் சேர்த்து பயன்படுத்தினால், வலிக்கு காரணமான நரம்பு முனைகளைத் தடுக்கும். மேலும் இது வீக்கம், சிவத்தல் போன்றவற்றையும் குறைக்க உதவும். ஆனால் கவனமாக இருங்கள். இதை பயன்படுத்தும் முன் மருத்துவரை அணுகுவது நல்லது.
- சொரியாசிஸ் பிரச்சனையால் ஏற்படும் அரிப்புக்களைக் குறைக்க வெதுவெதுப்பான நீரில் சிறிது எப்சம் உப்பு சேர்த்து கலந்து, அந்நீரில் 15 நிமிடம் பாதிக்கப்பட்ட பகுதியை ஊற வைக்க வேண்டும். அதன் பின் அப்பகுதியில் மறவாமல் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துங்கள். இல்லாவிட்டால், அது வறட்சியை உண்டாக்கும்.
- உடலில் சொரியாசிஸ் பிரச்சனை இருந்தால், குளிக்கும் நீரில் சிறிது டீ-ட்ரீ ஆயில் சேர்த்து கலந்து குளியுங்கள். ஆனால் அதற்கு முன் இந்த எண்ணெயை உங்கள் உடலில் சோதனை செய்து பார்க்க வேண்டும். ஏனெனில் சிலருக்கு இந்த எண்ணெய் ஆகாது.
- சொரியாசிஸ் பிரச்சனை இருப்பவர்கள், தங்களின் அன்றாட உணவில் மஞ்சளை தவறாமல் சேர்ப்பதோடு, தினமும் காலையில் ஒரு இன்ச் மஞ்சளை சாப்பிடுவதும் மிகவும் நல்லது.
Loading...