சந்தன கடத்தல் வீரப்பன் என்றால் தமிழ்நாடு மட்டுமல்லாமல் கர்நாடகாவும் சேர்ந்து அதிரும். சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து கொண்டு மொத்த பேரையும் கலங்கடித்தவர். வீரப்பன் இருக்கும் போது தமிழக மக்களிடம் வாய் பேசவே பயப்படும் கர்நாடகா. ஆனால் அவர் இறந்த பிறகு அவ்வப்போது தமிழர்களை அடித்து துரத்துவதை வேலையாக வைத்துள்ளனர்.
வீரப்பனை வைத்து ஏற்கனவே வனயுத்தம் என்ற பெயரில் படம் எடுத்து விட்டனர். அது மட்டும் இல்லாமல் மக்கள் தொலைக்காட்சியில் ஒரு நாடகமாகவும் அவரது வாழ்க்கை வந்தது. இது எல்லாத்துக்குமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. வீரப்பன் நாடகம் போடும் போது மட்டும் மக்கள் தொலைக்காட்சியின் டிஆர்பி ரேட்டிங் உச்சத்தில் இருக்கும்.
புகழ்வாய்ந்த வீரப்பன் வரலாற்றை தற்போது வெப்சீரிஸ் ஆக எடுக்க பலரும் போட்டி போட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் ஓTT நிறுவனங்களும் அதை தயாரிப்பதில் பெரிதும் ஆர்வம் கொண்டுள்ளனர். சுமார் 20 கோடி வரை வீரப்பன் வரலாற்றுக்கு விலை வைக்கப்பட்டுள்ளார்களாம். விரைவில் அந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற அறிவிப்பு வரும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
இன்னும் அமேசான் மற்றும் நெட்ப்ளிக்ஸ் போன்ற நிறுவனங்கள் யார் இந்த வரலாற்றை தயாரிப்பது என்பதில் கடும் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார்களாம். இன்னும் விலை உயர வாய்ப்புள்ளது. வீரப்பன்னா சும்மாவா!