இந்தியாவில் கணவனை பிணைக் கைதியாக பிடித்து வைத்துக் கொண்டு, 40 வயது பெண் மற்றும் 12 வயது சிறுமியை வன்கொடுமை செய்த 6 பேர் கொண்ட கும்பலை பொலிசார் தேடி வருகின்றனர்.
இந்த கொடூர சம்பவம் மத்திய பிரதேசத்தின் புர்ஹான்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.
இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைக்கு இடைப்பட்ட இரவில், ஆயுதமேந்திய ஆறு பேர் கொண்ட கும்பல், அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்
அதன் பின் வீட்டிலிருந்த கணவனை பிணைக்கைதியாக பிடித்து வைத்துக் கொண்டு, 40 வயது மனைவி மற்றும் 12 வயது மகளை மிரட்டி ஒரு வயல்வெளி பகுதிக்கு தூக்கி சென்று, அங்கு அவர்களை வன்கொடுமை செய்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, வீட்டில் இருந்த பணம் மற்றும் மொபைல் போன்களை திருடிவிட்டு சென்றுள்ளனர். இந்த கும்பலிடம் உயிர் தப்பிய அவர்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க, பொலிசார் அந்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
ஒரு பெண் மற்றும் அவரது 12 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படும் ஆறு ஆண்களை மத்திய பிரதேசத்தில் போலீசார் தேடி வருகின்றனர்.
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) போன்ற பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ததாக ஷாப்பூர் காவல் நிலைய பொறுப்பாளர் சஞ்சய் பதக் கூறியுள்ளார்.