பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் புதிய ஊரடங்கு நடவடிக்கைகள் குறித்து பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸ் விவகாரத்தில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கூறப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க போரிஸ் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி, கொரோனா வைரஸ் காரணமாக இருந்த தளர்வுகள் கொஞ்சம், கொஞ்சமாக தளர்த்தப்பட்டு வருகின்றன.
ஆனால் அது மக்களுக்கு எளிதாக புரியும் படி இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதாவது, பள்ளிகள் திறக்கப்படுது, பப்கள் மூடப்படுவது போன்ற புதிய விதிகளால், இங்கிலாந்தின் வடக்கில் இருக்கும் மில்லியன் கணக்கான மக்கள் குழப்பமடைந்து வருகின்றனர்.
இதில், ஒரு மூலோபாயம் இருக்கிறதா என்று நிபுணர்கள் கூட கேள்வி எழுப்புகிறார்கள்.
இந்நிலையில் தான் போரிஸ் சில நாட்களுக்கு முன்பு ஐரோப்பாவில் கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்படலாம் என்று எச்சரித்தார்.
அதைத் தொடர்ந்து நாட்டின் ஒரு சில பகுதிகளில் கொரோனா பாதிப்பு தீவிரமாகி வருகிறது. இதனால் உள்ளூர் ஊரடங்கு விதிக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது.
குறிப்பாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பதாக உறுதியான தகவல் கிடைக்கும் பட்சத்தில் லண்டன் மக்கள் ஊரடங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என சுகாதார அமைச்சர் மாட் ஹான்காக் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து தற்போது போரிஸ் ஜோன்சன், இங்கிலாந்தில் பரவி வரும் கொரோனா வைரஸால், இரண்டாவது அலை இருக்குமானால், இங்கிலாந்தின் புதிய ஊரடங்கு நடவடிக்கை குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீப நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக இந்த திட்டங்கள் மதிப்பிடப்படுகின்றன.
மேலும், பரிசீலிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளில் வயதானவர்களை மீண்டும் ஒரு முறை பாதுகாக்கும்படி கேட்பது, லண்டனில் ஊரடங்கு என்றால் அது இரண்டாவது அலையாக இருக்க கூடும் என்று கூறப்படுகிறது.
இந்த திட்டத்தின் படி, ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் என்று கடந்த மார்ச் முதல் அடையாளம் காணப்பட்ட நபர்களின் வயது மதிப்பிடப்படுவதுடன், அதிக எண்ணிக்கையிலான மக்கள் கேடயம் திட்டத்தில் பங்கேற்குமாறு கேட்கப்படுவார்கள் என்று பிரபல ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
தலைநகரில்(லண்டன்) R எண் அதிகரிக்கும் போது M25-க்கு அப்பால் பயணத்தை கட்டுப்படுத்துவது மற்றும் மற்றவர்களின் வீடுகளில் தங்குவதை நிறுத்துவது ஆகியவை இந்த திட்டத்தில் அடங்கும்.
சமீபத்திய நாட்களில் லீசெஸ்டர் மற்றும் இங்கிலாந்தின் வடமேற்கின் சில பகுதிகளில் விதிக்கப்பட்ட உள்ளூர் ஊரடங்குகளில் இருந்த கொள்கைகளைப் போன்றது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.