யாழில் நிவாரண உதவி செய்துவிட்டு அந்த புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டதால் யுவதி தற்கொலை முயற்சி!!
யாழில் நிவாரண உதவியாக 60 ரூபா பாணை கொடுத்துவிட்டு அரசியல்கட்சி ஒன்று அதனை எடுத்து தமது முகப்புத்தகத்தில் வெளியிட்டதால் யுவதி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ் மாவட்டத்தில் ஐ.தே.க கட்சியி்ன் ஆதரவாளர்கள் தீவகம் உட்பட பல இடங்களில் பாண்களை மட்டும் கொடுத்து அதனை தமக்கான பெரும் தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தியதுடன் அந்தப் புகைப்படங்களை தமது கட்சியின் பேஸ்புக்கில் பதிந்து வந்துள்ளார்கள். இவ்வாறு கட்சியின் ஆதரவாளர்கள் யாழில் குறித்த இடம் ஒன்றில் கொடுத்த பாணை, அப்பகுதியில் கால் நடக்க இயலாது இருந்த வயோதிபப் பெண் ஒருவருக்கு பெற்றுக் கொடுப்பதற்காக யுவதி ஒருவர் அந்தப் பாணை வாங்கியுள்ளார். ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்ததால் கடைகளுக்கும் செல்ல முடியாத நிலையிலேயே யுவதி அந்த வயோதிபப் பெண்ணுக்கு விஜயகலாவின் ஆதரவாளர்கள் கொடுத்த பாணை வாங்கியுள்ளார். இவர்கள் யுவதியிடம் பாண் கொடுத்துக் கொண்டிருந்த போது யுவதியையும் யுவதியுடன் பாண் வாங்க நின்றிருந்த ஏனைய மக்களையும் வாகனத்தின் மேற் பகுதியில் இருந்து கைத் தொலைபேசியில் விஜயகலாவின் ஆதரவாளர் புகைப்படம் எடுத்துள்ளார். உடனடியாக அந்தப் புகைப்படங்களை அவர்கள் தமது கட்சியின் யாழ்பாணத்துக்குரிய முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ளார்கள்.
குறித்த யுவதி நல்ல வசதிபடைத்தவர் எனவும் யுவதியின் அண்ணன்மார் இருவர் மற்றும் நெருங்கிய உறவுகள் புலம்பெயர் நாடுகளில் வசி்த்து வருபவர்கள் எனவும் தெரியவருகின்றது. இந் நிலையில் யுவதியின் புகைப்படம் குறித்த பேஸ்புக்கில் வெளிவந்ததை அறிந்த யுவதியின் அண்ணனின் நண்பர்கள் இது தொடர்பாக புலம்பெயர் நாட்டில் இருந்த அண்ணனை நக்கல் அடித்துள்ளதாகத் தெரியவருகின்றது. யுவதியின் புகைப்படம் ஐ.தே.க கட்சியின் பெயரில உள்ள பேஸ்புக்கில் வந்ததை பார்த்து அதிர்ந்த அண்ணன் யுவதியிடம் இது தொடர்பாக கேட்டு பெரும் சண்டை பிடித்துள்ளான். குறித்த வயோதிப மாதுவுக்கு தேவையான பணத்தை தாமே தந்திருப்போம்… எதற்காக இவ்வாறு கேவலம் கெட்ட வேலை செய்து எங்கள் மானத்தை வாங்கினாய் என அண்ணன்கள் இருவரும் ஏசியுள்ளனர்.
அத்துடன் குறித்த ஐ.தே.க கட்சியின் யாழ்ப்பாண பேஸ்புக்கிற்கு குறித்த புகைப்படத்தை அகற்றுமாறும் அண்ணன்கள் தகவல் அனுப்பியதுடன் விஜயகலாவின் நெருங்கிய சகாவிடமும் இது தொடர்பாக கெஞ்சிக் கேட்டுள்ளார்கள். இருப்பினும் யுவதியின் புகைப்படம் குறித்த பேஸ்புக்கில் அழிக்கப்படாது குறித்த தகவல்களை அனுப்பிய அண்ணன்களின் கணக்குகள் அவர்களால் தகவல் அனுப்ப முடியாதவாறு தடுக்கப்பட்டுள்ளது.
குறித்த புகைப்படங்கள் வெளியாகி இரு வாரங்களில் குறித்த புகைப்படச் சர்ச்சையால் யுவதி தற்கொலைக்கு முயன்று காயங்களுடன் காப்பாற்றப்பட்டுள்ளார். இது தொடர்பாக புலம்பெயர் நாட்டில் உள்ள யுவதியின் அண்ணன்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளதுடன் இவ்வாறு உதவி செய்து புகைப்படங்கள் வெளியிடுபவர்கள் தொடர்பாக பெரும் விசனத்தையும் தெரிவித்துள்ளனர்.
யுவதி தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட பின்னரே குறித்த புகைப்படங்கள் ஐ.தே.க கட்சியின் யாழ் மாவட்ட பிரிவு பக்கத்திலிருந்து அகற்றப்பட்டதாக அண்ணன் தெரிவித்தார்.
இதே வேளை விஜயகலாவின் குறித்த முகப்பக்கத்தை ஊத்தை சேது என்பவனே இயக்கி வருவதாக விஜயகலாவுக்கு நெருக்கமானவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக புலம்பெயர் நாட்டில் உள்ள குறித்த யுவதியின் அண்ணன் தெரிவித்துள்ளார். இவனு்ககு எதிராக நடவடிக்கை எடுத்தால் தான் வீடியோ சற்றிங் மூலம் நீதிமன்றில் சாட்சி கூற வசதியிருந்தால் கூறுவேன் எனவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த ஊத்தை சேது அண்மையில் தன்னை நல்லவனாகத் தெரிவித்தும் தன்னை அமேரிக்க ஜனாதிபதி போல் உருவகித்தும் தான் அமெரிக்க வெளியுறவுத்துறையின் புலனாய்வாளன் என கூறியும் பேஸ்புக்கில் பெருமளவு பணத்திற்கு விளம்பரம் செய்து வீடியோக்கள் வெளியிட்டு வருவதாக இவனால் எற்கனவே பாதிக்கப்பட்டவர்கள் எமக்குத் தெரிவித்துள்ளார்கள். யாழில் உள்ள ஒவ்வொருத்தரும் இவனது வீடியோவை அதிகாலை பேஸ்புக் திறந்தவுடன் பார்க்கின்றது போல பேஸ்புக்கில் விளம்பரப்படுத்தியிருந்தான்.
இவனுக்கு யாழ்ப்பாணம் உட்பட பல இடங்களில் நீதிமன்ற வழக்குகள் இவனது கப்பம் மற்றும் பாலியல் நடவடிக்கைகள் காரணமாக நிலுவையில் உள்ளது என்பதுடன் இவன் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் கப்பம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்குள் அடைக்கப்பட்டது தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளான். இவனது பாஸ்போட் நீதிமன்றத்தால் முடக்கப்பட்டு இவன் தற்போது யாழ்ப்பாணத்திலேயே மறைந்து வாழ்கின்றான் என்வதும் இவனால் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள். எந்த ஒரு குற்றவாளியும் தன்னை கெட்டவன் என்றோ அல்லது தன்னில் பிழை இருக்கின்றது என்றோ நீதிமன்றில் கூட தெரிவிக்கமாட்டார்கள். இவ்வாறான நிலையில் இவன் வெளியிட்டுள்ள வீடியோக்களை பார்வையிட்டு லைக் போட்டவர்களுக்கும் அந்த வீடியோக்களை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொண்ட அப்பாவிகளுக்கும் இவனது திருகுதாளங்கள் விளங்காத நிலையில் விரைவில் அவர்களுக்கும் நீதிமன்றம் விளங்கப்படுத்தும் என நீதித்துறையுடன் தொடர்புபட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இவன் தொடர்பான முழுமையான ஆதாரங்கள் சம்மந்தப்பட்டவர்களிடம் இருக்கின்ற போதும் இவன் மீது நீதிமன்றம் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதால் அவற்றை அவர்கள் வெளியிடவில்லை என்றும் தெரியவருகின்றது.