நியூசிலாந்தில் நடக்கும் சூப்பர் ஸ்மாஷ் டி20 போட்டியில் ஜெயவர்த்தனேயின் அதிரடி சதம் உலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ஜெயவர்த்தனே சூப்பர் ஸ்மாஷ் டி20 போட்டியில் Central Districts அணிக்காக ஆடி வருகிறார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் Central Districts அணி, Otago அணியை எதிர்கொண்டது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய Otago அணி அதிரடியாக விளையாடி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 249 ஓட்டங்கள் சேர்த்தது.
அந்த அணியின் தலைவர் ரூதர்போர்ட் 50 பந்துகளில் 9 பவுண்டரி 8 சிக்சர்கள் என 106 ஓட்டங்கள் சேர்த்தார். நெய்ல் பிரோம் (42), அன்ரூ கிட்சன் (54) ஆகியோரும் ஓட்டங்கள் குவித்தனர்.
இந்நிலையில் 250 ஓட்டங்கள் சேர்த்தால் வெற்றி என களமிறங்கிய Central Districts அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தது.
தொடக்க வீரர் ஜார்ஜ் வொர்கர் (35) விரைவில் ஆட்டமிழந்தாலும், அடுத்து வந்த ஜெயவர்த்தனே ருத்ரதாண்டவம் ஆடினார். அவர் 56 பந்தில் 12 பவுண்டரி, 7 சிக்சர்கள் என 116 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த டாம் பூரூசும் அதிரடி காட்டினார். இருப்பினும் கடைசி நேர வீரர்கள் சரியாக ஆடாததால் Central Districts அணியால் 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 248 ஓட்டங்களே சேர்க்க முடிந்தது.
இதனால் அந்த அணி 1 ஓட்டம் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. டாம் பூரூஸ் 3 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 61 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பரபரப்பான இந்த ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்லவொரு விருந்தாக அமைந்தது.