தல அஜித் நடித்து வரும் ‘அஜித் 57’ படத்திற்காக ஓய்வின்றி நடித்து வரும் அஜித், விரைவில் பல்கேரியா படப்பிடிப்பை முடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு 80% வரை முடிந்துவிட்டதாகவும், விரைவில் அஜித் உள்பட படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக தொடர் படப்பிடிப்பில் இருந்த அஜித், தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை குடும்பத்தினர்களுடன் இருக்க முடிவு செய்துள்ளது.
தற்போது கிடைத்துள்ள தகவலின்படி அவர் சென்னையிலேயே குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை கொண்டாடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் ‘தல 57’ படத்தின் வில்லனாக விவேக் ஓபராய் நடித்து வருகிறார்.
அனிருத் இசையில் சிவா இயக்கி வரும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.
பல்கேரியா படப்பிடிப்பை தொடர்ந்து இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் ஜனவரி இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.